ஆயுத போராட்டம் இன்று முடிவிற்கு வந்துவிட்டதை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்-மனோ கணேசன் எம்.பி.

வீரகேசரி நாளேடு 6/3/2009 9:01:29 AMபுலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை. ஆனால் தாய்நாட்டிலே வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப் போராட்டமும் அதைச் சார்ந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் கவன ஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டு வரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்து கொள்ளப்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

நாட்டின் இன்றைய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ எம்.பி. மேலும் கூறியதாவது, 1940 களில் தொடங்கப்பட்ட தமிழர்களின் தேசிய போராட்டத்தின் தலைமையை 1970களில் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம் சுவீகரித்துக் கொண்டது. ஆயுதப் போராட்டம் தோற்றுவித்த யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டாலும் தேசிய போராட்டத்தை தோற்றுவித்த அரசியல் காரணங்கள் அப்படியே இருக்கின்றன. தேசிய இனப் பிரச்சினையை தோற்றுவித்த இந்த காரணங்களுக்கு படிப்படியாக பதில் தேடும் தேவையை மறந்து ஆயுதப் போராட்டம் கொண்டு செல்லப்பட்டதனாலேயே இன்று தோல்வி ஏற்பட்டுள்ளது.

இந்த தோல்வியுடன் இந்நாட்டிலே தமிழ் இனம் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளது. அத்துடன் மேலதிக சுமையாக மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் நமது மக்கள் தொகையில் பத்தில் ஒருவர் அங்கவீனராக உள்ளனர். இரண்டு பெற்றோர்களையும் இழந்துவிட்ட பெருந்தொகை குழந்தைகள் இருக்கின்றார்கள்.

பிள்ளைகளை இழந்துவிட்ட பெருந்தொகை அனாதை வயோதிப பெற்றோர்களும் இருக்கின்றார்கள். மிகப் பெருந்தொகையானோருக்கு தமது குடும்ப அங்கத்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிருடன் இருந்தால் எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. தனித்துவிட்ட பெண்களின் பாதுகாப்பான வாழ் நிலைமைகள் கேள்விக்குறியாகவுள்ளன. மந்த போசனமும் தொற்று நோயும் பசியும் நமது மக்ககளை வாட்டுகின்றன.

இந்நிலையில் நமது மக்களின் அகதி வாழ்க்கை தொடர்பிலான கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலும் அரசியல் தீர்வு தொடர்பில் நிலவுகின்ற கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலும் சமாந்தர போக்கை கடைப்பிடிக்க வேண்டியது அனைத்து தமிழ் அரசியல் சக்திகளின் வரலாற்று கடமையாகும். இந்த இரட்டை நோக்கங்களை அடைவதற்கு நாம் இலங்கை மண்ணில் இருந்தபடி ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றோம். தாய் நாட்டிலே வாழும் மக்களின் மத்தியில் இருந்து செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு துணை சக்தியாக மாத்திரமே புலம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்கால நடவடிக்கைகள் அமைய முடியும். இதை புலம்பெயர்ந்த தமிழ் முன்னோடிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

Source : Virakesari

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: