Sunanda Deshapriya : Vikalpa_07 (Tamil)

Source : Globaltamilnews.net

இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கடுமையான அச்சம் நிறைந்த வரலாறை நீண்டகாலம் எதிர்நோக்கக்கூடும் ‐ GTN ற்காக ‐ சுனந்த தேசப்பிரிய.

சுடரொளி மற்றும் உதயன் பத்திரிகைகளின் ஆசிரியர் வித்தியாதரன் இரண்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவர் மீது எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை என காவற்துறையினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில் கடந்த 24 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தினால் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் இரண்டு விமானங்கள் கொழும்பில் உள்ள கேந்திர இடங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தியமை தொடர்பாக விசாரணைகளை நடத்தி வந்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு காவற்துறையினர், தாக்குதல் நடத்தப்பட்ட இரவு வித்தியாதரன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகள் குறித்து அவரிடம் விசாரணைகளை நடத்தியிருந்தனர்.

வித்தியாதரனை கைதுசெய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை நல்ல முறையில் நடத்தியதாக அவரது உறவினர் என்னிடம் தெரிவித்தனர்.

கைதுசெய்து ஒருவாரத்திற்குள் விசாரணைகள் முழுமையாக முடிவடைந்துள்ளதுடன் அவர் இரண்டு மூன்று நாட்களில் விடுதலை செய்யப்படுவார் என அவரது குடும்பத்தினர் நம்பியிருந்தனர்.

எனினும் பாதுகாப்பு அமைச்சு அவரை 90 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதுடன் வித்தியாதரன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி வித்தியாதரன் தனது குடும்ப உறவினர் ஒருவரின் மரண நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது, சீருடை அணிந்த மூன்று காவற்துறையினருடன் வெள்ளை வானில் சென்ற சிலரினால் வித்தியாதரன் மற்றும் சுடரொளி, உதயன் பத்திரிகையின் உரிமையாளர் சரவணபவன் ஆகியோரை தாக்கிவிட்டு, வித்தியாதரனை கடத்திச் சென்றனர்.

சாதாரண உடையில் இருந்தவர்களால் அவரை கடத்த முடியாத நிலையில், சீருடை அணிந்தவர்கள் இணைந்து அவரைக் கடத்திச் சென்றனர்.

அங்கிருந்த உறவினர்களிடம் எந்த விதமான அறிவிப்பு ஆவணங்களையும் அவர்கள் கொடுக்கவில்லை.

இந்த நிலையில் வித்தியாதரன் கடத்தப்பட்டதாகவும் அதில் காவற்துறையினருக்கு தொடர்பில்லை எனவும் காவற்துறைப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்திருந்தார்.

சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்க தொடங்கியதும், காவற்துறையினர் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, வித்தியாதரன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

வித்தியாதரன் அப்போது, கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்ததுடன் அவர் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் பெப்ரவரி 26 ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர், வித்தியாதரன் கடத்தப்படவில்லை எனவும் அவர் சட்;டரீதியாக கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அன்றைய தினமே அரசாங்கத்தின் யுத்தம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை வழங்கும் பத்திரிகை ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில், சுடரொளிப் பத்திரிகையின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முதலில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பின்னர் அவர் காவற்துறை கூண்டில் காணப்பட்டார். கடத்திச் செல்லப்படுத்தல் சட்டவிரோதம் என்ற போதிலும் அவர் கைதுசெய்யப்பட்டது சட்டரீதியானது.

முதலில் வித்தியாதரனை கடத்திச் சென்றவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கிய நிலையில் தெமட்டகொட பகுதியில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த கடத்தலுக்கும், கைதுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக தெரியவில்லை. வேறு காரணங்களுக்காக அவர் தாக்கப்பட்டிருக்கலாம். எனினும் வேறு காரணத்திற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குறிப்பிட்டிருந்தது.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் எந்த காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்தார் என்பதை அறிந்து கொள்வது முக்கியம்.

ஓன்று தெளிவாகின்றது. தாக்குதல் நடத்திய தவறில் இருந்து காவற்துறையினரை தப்ப விப்பதற்காக ஆசிரியர் சம்பந்தமில்லாத சாட்சியங்களை முன்வைத்துள்ளார்.

ஊடகதர்மம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் இந்த ஆசிரியர் தலையங்கத்தை வாசித்து பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு மூன்று கிழமைக்கு பின்னர் அதாவது மார்ச் 18 ஆம் திகதி வித்தியாதரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், ஏதோ ஒரு குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, தெமட்டகொட பகுதியில் போட்டு விட்டு சென்றிருந்த நிலையில் வித்தியாதரன் தமக்கு கிடைத்ததாக தெரிவி;த்திருந்தனர்.

தாம் விசாரணை நடத்துவதற்காக அவரை தேடியதால், தடுத்து வைத்துள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவினர் குறிப்பிட்;டிருந்தனர்.(நகைப்புக்குரிய விடயமல்ல) கடத்தப்பட்டதாக காவற்துறையினர் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், வித்தியாதரனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தாது, காவற்துறை விசாரணைகள் முடியும் முன்னமே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கடுமையான நிலைப்பாட்டில் இவ்வாறு கூறியிருந்தார்.

வித்தியாதரன் ஒரு பயங்கரவாதி, அவரைக் காப்பாற்ற முயன்றால், உங்கள் கைகளிலும் இரத்தம் தோயும்,கொழும்பில் புலிகள் நடத்திய விமானத் தாக்குதல் தொடர்பான இணைப்பு நடவடிக்கையை அவரே மேற்கொண்டார் (பெப்ரவரி 26 ஆம் திகதி அவுஸ்த்ரேலியாவின் எஸ்.பீ.எஸ் தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வி).

இவ்வாறான சூழ்நிலையில், வித்தியாதரன் தம்மை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்தார்.

புலிகளின் விமானத் தாக்குதல் நடத்திய தினத்தில் தான் பிரான்சில் உள்ள தனது சகோதரி மற்றும் மைத்துனர் ஆகியோருடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு இந்த சந்தேகத்திற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் தான் பயங்கரவாதி என குறிப்பிட்டப்பட்டது, தன்மை அவமதிக்கும் நடவடிக்கை, கைதுசெய்யப்பட்ட போதே தாம் தாக்கப்பட்டதால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறவேண்டியேற்பட்டது எனவும் மனுவில் வித்தியாதரன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அரசாங்கம் தற்போது மக்களின் நலன் மற்றும் ஜனநாயகத்தை மதிக்கின்றது எனில் பதில் கூறவேண்டிய பல்வேறு கேள்விகள் உள்ளன.

பெப்ரவரி 26 ஆம் திகதி கல்கிஸ்சையில் வைத்து வித்தியாதரன் கடத்தப்பட்டார் என காவற்துறையினர் கூறும் கதையினை அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறதா?. அவ்வாறொனில், அந்த கடத்தல் குழுவின் இடையில் மூன்று காவற்துறை சீருடை அணிந்தவர்கள் எப்படி இருந்தனர்?. இந்த கடத்தல் குறித்து உடனடியாக காவற்துறையினர் மற்றும் அரச உயர்மட்டத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசாங்கத்தின் பாதுகாப்பின்றி, கல்கிஸ்சையில் இருந்து கொழும்பு நகர் ஊடாக தெமட்டகொட வரை எப்படிச் சென்றது?.

வித்தியாதரன் கடத்தப்படவில்லை, அவர் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாக அன்றைய தினம் 2 மணிக்கு காவற்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

எந்த காவற்துறை அதிகாரியின் அறிக்கையின்படி அவர் அப்படிக் கூறியிருந்தார்?. வித்தியாதரன் கொலை செய்யப்படவிருந்ததன் காரணமாகவா, கடத்திச் சென்றவர்கள் எவ்வித அச்சமும் இன்றி அவரை தாக்கியதுடன், அவர் கைது செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் எதனையும் வழங்கவில்லை?.

அவர் கொலை செய்யப்படாமைக்கான காரணம் தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்களா?. விசாரணைகளுக்கு தேவைப்பட்டதாக கூறும் குற்றத்தடுப்பு பிரிவினர், தமது அலுவலகம் இருக்கும் தெமட்டகொட பகுதியிலேயே வித்தியாதரன் இட்டுச் செல்லப்பட்டதாக கூறுவது ஆச்சரியமானதல்லவா?.

கடத்தியவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட தகவல் பரிமாற்றத்தின் அடிப்படையில் அவ்வாறு நிகழ்ந்ததா?. இதனைத் தவிர வித்தியாதரன் ஒரு பயங்கரவாதி என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்டிருந்தார்?. விசாரணை முடியும் முன்னர் அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் அவ்வாறான கருத்தை வெளியிடுவது சட்டத்தை மீறிய நடவடிக்கை இல்லையா?.

காவற்துறையினர் வித்தியாதரன் மீது எந்த குற்றச்சாட்டும் நிருபிக்கப்படவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தனது குற்றச்சாட்;டை வாபஸ் பெற்றுக் கொள்வாரா?.

வித்தியாதரன் கடத்தப்பட்டது, அவர் தாக்கப்பட்டது, காவற்துறை பேச்சாளரின் முரண்பட்ட அறிக்கைகள், ஊடகத்துறை அமைச்சரின் கருத்து, பாதுகாப்புச் செயலாளரின் கருத்து, 28 ஆம் திகதி அரச சார்பான பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் மற்றும் இறுதியில் காவற்துறையினர் வித்தியாதரனை விடுதலை செய்ய நேர்ந்தமை, நகைச்சுவை நாடகமல்ல, இலங்கையின் சுதந்திர ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் எதார்த்தமான நிலைமை!.

இந்தக் கடத்தல், தாக்குதல், அவமதிப்பை ஏற்படுத்தும் கருத்துக்கள் போன்றவை குறித்து எந்த விசாரணைகளும் நடத்தப்பட போவதில்லை.

யுத்த வெற்றிகளால், திளைத்திருக்கும் சிங்கள சமூகம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீறுவதற்கு தமக்கு அனுமதி பத்திரத்தை வழங்கியுள்ளதாக அரசாங்கம் எண்ணியுள்ளமை தெளிவாகியுள்ளது.

இந்த பின்னனியில் நாம் எதிர்நோக்கிய கடுமையான அச்சம் நிறைந்த வரலாறை இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் நீண்டகாலம் எதிர்நோக்கக்கூடும்.

சுனந்த தேசப்பிரிய.

updated – 2009-04-29
மூலம் – சுனந்த தேசப்பிரிய.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: